passport

பாஸ்போர்ட் என்பது நாம் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தேவைப்படும் ஒரு அடையாள புத்தகம்.  இது இருந்தால் மட்டுமே நாம் வெளிநாடுகளுக்கு சுற்றுலாவோ அல்லது பணி நிமித்தமாகவோ செல்ல முடியும்

எனவே பாஸ்போர்ட் என்பது ஒரு முக்கிய ஆவணமாகும், அனைவரும் இதை நேரம் கிடைக்கும் போதே பதிந்து எடுத்து வைத்து கொள்வது மிக சிறந்தது.  திடீர் என  தேவைப்படும்போது நாம் வீணாக அலைய வேண்டியது இல்லை.

பாஸ்போர்ட் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்.  இதற்கு எந்தவிதமான் அடிப்படை தகுதிகளும் தேவையில்லை

இதற்க்கான நடைமுறைகளை நமது அரசு தற்போது மிகவும் தளர்த்தி உள்ளது.  மேலும் தனியார்துறை மூலம் செயல்பாடுகளை மேற்கொள்வதால் விரைவாகவும் செய்து முடிக்கபடுகிறது.

பாஸ்போர்ட் எடுப்பதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  ஆனால் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து பணம் செலுத்தி நமக்கான நேர்காணல் நேரத்தையும் மட்டுமே பெற்று கொள்ளலாம்.

நேர்காணலுக்கு பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நாம் நமது அடையாள சான்று, இருப்பிட சான்று மற்றும் கல்வி சான்று ஆகியவற்றின் அசல் ஆவணங்களை கொண்டு செல்லவேண்டும்.  அங்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபின் உங்கள் விண்ணப்பத்தின்  முகவரி மற்றும் அடையாள உண்மைத்தன்மையை உறுதிசெய்ய உங்கள் ஊர் காவல்நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் உண்மை என்று உறுதிசெய்யபட்டபின் உங்கள் பாஸ்போர்ட் அச்சுக்கு அனுப்பப்படும்.

அச்சுவேலை முடிந்தவுடன் உங்கள் முகவரிக்கு விரைவு தபாலில் அனுப்பிவைக்கப்படும். இதுவரை நடக்கும் பணிகளின் விவரங்கள் உங்கள் மொபைல் போனுக்கு குறுந்தகவலாக அனுப்பிவைக்கபடும்.  இக்குறுந்தகவல் சேவை வேண்டும் என்றால் நீங்கள் நேர்காணலின் போது ரூ.40 தனியாக பணம் செலுத்த வேண்டும்.

நாங்கள் உங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டண தொகையையும் ஆன்லைனில் செலுத்தி, நேர்காணலுக்கான நேரத்தையும் பெற்று தருகிறோம்.

ஆன்லைனில் பதியும்போது தேவையான ஆவண விபரங்கள் :(விபரங்கள் மட்டும் போதும் ஆவணம் தேவை இல்லை)

  • ஆதார் எண்
  • பெயர் மற்றும் முகவரி விபரங்கள்
  • தாய், தந்தை மற்றும் கணவர் அல்லது மனைவி விபரங்கள்
  • படிப்பு விபரம்
  • பணி விபரம்
  • வாக்காளர் அட்டை எண்
  • பான் அட்டை எண்
  • மொபைல் எண்
  • ஈமெயில்
  • உங்கள் வீட்டு அருகில் குடியிருக்கும் இருநபர்களின் முகவரி மற்றும் மொபைல் எண்.

நேர்காணலின் போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் : (அனைத்தும் அசல்)

  • ஆதார் அட்டை
  • இருப்பிட சான்று
  • கல்வி சான்று
  • வாக்காளர் அட்டை
  • பான் அட்டை

மேலும் விபரங்களுக்கு எங்கள் அலுவலகத்தை அணுகவும்.

எங்களை தொடர்பு கொள்ள Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here