fastag

Fastag – இந்த வார்த்தையை தற்போது அடிக்கடி நாம் கேட்க முடிகிறது.  அது என்ன Fastag ? டோல்கேட்களில் நாம் இப்ப்போது சந்திக்கும் மிகபெரிய துயரம்  என்பது அதிக போக்குவரத்து நேரங்களில் வரிசையில் நிற்பது.  இந்தியாவில் அதிகமாக சுற்றுசூழல் மாசு ஏற்படுவது இந்த மாதிரி போக்குவரத்து இடையூறுகளின் பொது வாகனங்கள் வெளியேற்றும் புகைகளினால் தான் என்பது சமீபத்திய சோதனை முடிவுகள்.

இவ்வாறு ஏற்படும் மாசுகளை குறைக்கவில்லை என்றால் நாட்டின் சுற்று சூழல் மிகவும் மோசமான நிலையை அடையும்.     எனவே நமது அரசு அதற்கான முதற்கட்ட வேளைகளில் துரிதமாக இறங்கி உள்ளது.  அதன் ஒரு பகுதிதான் இந்த எலெக்ட்ரானிக் டோல்கேட் கலெக்சன்.  இந்த 2017 டிசம்பர் 1  முதல் இந்தியாவில் புதியதாக பதியப்படும் நான்கு சக்கரம் மற்றும் அதற்க்கு மேற்பட்ட அனைத்து பெரிய வாகனங்களும் கட்டாயம் இந்த Fastag பதிந்திருக்க வேண்டும்.  வரும் 2018 ஜனவரி 1 முதல் அனைத்து பழைய நான்கு சக்கரத்திற்கு மேற்பட்ட அனைத்து வாகனங்களும் கட்டாயம் Fastag பதிந்திருக்க வேண்டும்.

fastag2Fastag – என்றால் என்ன ? :

Fastag என்பது ஒருவகையான எலெக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட ஸ்டிக்கர்.  இந்த சிப் ஸ்டிக்கர் SBI, HDFC, PAYTM, EQUITOS போன்ற நிறுவனங்கள் மூலம் வழங்கபடுகின்றன.  இவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நாம்  ஒரு ப்ரிபெயிடு கணக்கு ஆரம்பித்து நமக்கான ஸ்டிக்கர் பெற்று நமது வாகனத்தில் ஒட்டி வைத்து கொள்ள வேண்டியது. நாம் நமது கணக்கில் முன்பணம் செலுத்தி இருப்பு வைத்து கொள்ளலாம்.  நாம் டோல்கேட் கடக்கும் போது Fastag உபயோகிப்பாளர்களுக்கு என தனியாக லைன் இருக்கும். அதன் வழியாக நாம் மெதுவாக சென்றாலே போதும் டோல்கேட் கட்டணம்  தானாகவே நமது கணக்கில் இருந்து பணம் எடுத்து கொள்ளப்படும். நாம் லைனில் நிற்காமல் சென்று கொண்டே இருக்கலாம்.

Fastag பயன்கள் :

  • டோல்கேட்டில் நிற்காமல் செல்வதால் நேரம் மிச்சமாகும்.
  • டீசல் செலவும் குறையும்
  • டோல்கேட் கடக்கும்போது வாகன உரிமையாளருக்கு குறுந்தகவலாக செய்தி கிடைக்கும்
  • 24 மணி நேரத்திற்குள் திரும்பினால் அதுவாகவே இரட்டை கட்டணமாக எடுத்துகொண்டு இரட்டை கட்டணத்திற்கான தொகையை மட்டுமே கணக்கில் இருந்து எடுக்கப்படும்.
  • ஒரே கணக்கில் எத்தனை வாகனங்களை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.  தேவையான வாகனத்திற்கு பணத்தை மாற்றிகொள்ளலாம்.
  • தொலைதூர பயணங்களின்போது டோல்கேட் கட்டணங்களை கையில் பத்திரமாக வைத்து கொண்டு இருக்க வேண்டிய பயம் இல்லை.
  • கணக்கை தானே நிர்வகித்து கொள்ளலாம்.

எவ்வாறு Fastag பெறுவது :

அருகில் உள்ள பொது சேவை மையங்களை (Common Service Center) அணுகி அங்கு உங்களின் மற்றும் வாகனங்களின் தகவல்களை அளித்து உங்கள் கணக்கை உருவாக்கி கொள்ளலாம்.  கணக்கு உருவாக்கப்பட்டவுடன் உங்கள் வாகனத்திகான ஸ்டிக்கரை அவர்களே உங்கள் வாகனத்தில் பொருத்தி தருவார்கள்.  (கட்டாயம் உங்கள் வாகனத்தை பதிவு மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்).

உங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களின் இடங்களை அறிய http://gis.csc.gov.in/locator/csc.aspx  என்ற இணைய முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

தேனீ மாவட்டத்தில் நீங்கள் இந்த வசதியை பெற எங்களை அணுகவும்:

டாட்நெட் வெப்ஸ்,

67, வடக்கு ரத வீதி , சின்னமனூர், தேனி மாவட்டம் – 625515

Mobile : 7373222266

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here