smartcard

குடும்ப அட்டை பெறுவது எப்படி

குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? தொலைந்து போனால் எப்படிப் பெறுவது போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் இங்கே…

குடும்ப அட்டையின் அவசியம்

பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் பெற மட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கக்கூடிய ஆவணமாகவும், இருப்பிடச் சான்றுக்கான மிக முக்கிய ஆவணமாகவும் பயன்படுகிறது.

குடும்ப அட்டை பெறுவதற்கான தகுதிகள்

  • தனிக்குடும்பமாக வசிக்கும் தமிழக மக்கள் எவருமே குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர் தனது குடும்பத்துடன் தனி சமையலறையைப் பயன்படுத்துபவராக, தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர் தமிழகத்தில் வேறு எந்தக் குடும்ப அட்டையிலும் இருக்கக்கூடாது.

எங்கே / யாரிடம் விண்ணப்பிப்பது

ரேசன் கார்டு தற்போது ஸ்மார்ட் கார்டாக மாறிவிட்டதால் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்க டாட்நெட் வெப்ஸ் போன்ற பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.  அவ்வாறு ஆன்லைனில் பதிந்து அதற்கான அத்தாட்சி சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றாக தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாதங்களுக்குள்ளான வீட்டு வரி / மின்சாரக் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்று அல்லது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் / பாஸ்போர்ட் நகல்/ வாடகை ஒப்பந்தம் இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் போதுமானது. ஒரு வேளை இந்தச் சான்றுகள் ஏதும் இல்லையென்றால், நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் பெற்றுக் கொடுக்கலாம்.

முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று.

முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியிடம் (TSO) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று.

எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர் போன்றவை அடங்கிய விவரங்கள் கொடுக்க வேண்டும்.

குடும்ப அட்டை எப்போது கிடைக்கும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அதாவது அதிகாரிகள் மனுதாரரின் வீட்டுக்கு நேரில் சென்று தனியாக சமையல் செய்யப்படுகின்றதா விண்ணப்பதாரர் சொன்னது உண்மையா என ஆய்வு செய்வார்கள்.

விண்ணப்பித்த 30 நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுக்கப்படவேண்டும் அல்லது குடும்ப அட்டை கொடுக்கப்படாததற்கு காரணம் சொல்லவேண்டும். அதையும் மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

குடும்ப அட்டை தொலைந்து போனால்

தொலைந்து போன குடும்ப அட்டையின் நகலுடன் டாட்நெட் வெப்ஸ் போன்ற பொது சேவை மையம் சென்று அதற்கான் கட்டணத்தை செலுத்தினால்  அங்கு உங்களுக்கு புதிய ஸ்மார்ட் அட்டை தருவார்கள்.

மேலதிக விவரங்களுக்கு

தங்கள் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பகுதியின் பொது விநியோகக் கடைக்கான பொருட்களின் ஒதுக்க்கீடு குறித்து அறியhttp://cscp.tn.nic.in/allotment_ver2/index.jspஇத்தளத்திற்குச் செல்லவும்.

அல்லது டாட்நெட் வெப்ஸ் அலுவலகத்திற்கு நேரில் வரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here