பணம் பரிமாற்றம் முக்கிய விபரங்கள்

ஆன்லைன் பணபரிமாற்றம் தற்போது ஒரு இன்றியமையாத செயல் ஆகிவிட்டது.  நிறைய தொழில்கள் இதை ஒரு முக்கிய அம்சமாக கொண்டுள்ளன.  அப்படி பணபரிமாற்றம் செய்வது எவ்வாறு என்பதை இங்கே பார்க்கலாம்.

டிஜிட்டல் இந்தியாவில் ஆன்லைன் பணபரிமாற்றம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அரசே இதற்கான இலவச செயலியை அறிமுகம் செய்துள்ளது.  எனினும் ஆன்லைன் பணபரிமாற்றம் சாதாரண மக்களும் பயன்படுத்தும் விதத்தில் இல்லை.  தவறுதலாக செயல்பட்டால் பணம் வேறு யாருக்கும் சென்று விடும் அபயம் உள்ளது.

ஆன்லைன் பணபரிமாற்றம் ஒருவருக்கு பணம் செலுத்துவதையும் ஒருவரிடம் இருந்து பணம் பெறுவதையும் வெகு சுலபமாக மாற்றி விட்டது.  இதை பல நிறுவனங்களும் ஒரு சேவையாக செய்து வருகின்றன.

நாங்களும் மக்களுக்கு அந்த சேவையை வழங்கி வருகிறோம்.  அரசு இந்த பணபரிவர்த்தனைக்கு சில கட்டுபாடுகளை விதித்துள்ளது.  அதாவது பணம் செலுத்துபவர் கட்டாயம் தனது ஆதார் எண்ணை பரிவர்த்தனை செய்யும் நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்.  அதன் மூலம் அந்த பணத்தை யார் அவருக்கு அனுப்புகிறார்கள் என்பதை அரசு அறிய முடியும்.  இதனால் பல் குற்ற நடவடிக்கைகள் தடுக்கபடுகின்றது.

எனவே ஆதார் எண் பணபரிமாற்றம் செய்வதற்கு மிக அவசியம் !.

Write a Comment

Your email address will not be published. Required fields are marked *