Home Education பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான் (PMGDISHA)

பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான் (PMGDISHA)

0
pmgdisha
PMGDISHA – DOTNETWEBS

பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்தா அபியான் (PMGDISHA)

கண்ணோட்டம்

கல்வி 2014 –ன் கீழ் மேற்கொள்ளப்பட்ட 71 வது என்எஸ்எஸ்ஓ ஆய்வின்படி, கிராமப்புற குடும்பங்களில் 6% பேர் மட்டுமே கணினி பயன்படுத்துவோராக உள்ளனர். இதலிருந்து 15 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்கள் (@ 16.85 கோடி குடும்பங்களில் 94%) கணினிகள் இல்லாமலும் மற்றும் டிஜிட்டல் படிப்பறிவற்று இருப்பதும் தெளிவாக தெரிகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் எங்கிலுமுள்ள கிராமப்புற பகுதிகளில் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு உறுப்பினர் என்ற விதத்தில் சுமார் 40% கிராமப்புற குடும்பங்களை சென்றடைந்து ஆறு கோடி பேர்களை டிஜிட்டல் கல்வியறிவு உள்ளவர்களாக ஆக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்கு முன்பாக, தி டிஜிட்டல் ஷக்ஷார்டா அபியான் (DISHA) அல்லது தேசிய மின்ணுக் கருவிகள் அறிவாற்றல் திட்டம் (NDLM) 52.5 லட்சம் மக்களுக்கு தகவல் தொழில் நுட்பம் பற்றிய பயிற்சியை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலுள்ள அங்கன்வாடி, ஆஷா பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகப் பணியாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி தருவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சாராதவர்களும் பயிற்சியின் மூலம் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்று ஜனநாயக நடைமுறைகளிலும் வளர்ச்சியிலும் திறம்படவும், விரைவாகவும் பங்கேற்க வழி பிறக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

எதிர்பார்க்கப்படும் விளைவு

டிஜிட்டல் கல்வி விளக்கம்: “டிஜிட்டல் கல்வி என்பது வாழ்க்கை சூழ்நிலைகளில் பயனுள்ள வேலைகளுக்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை புரிந்துகொள்ளும் மற்றும் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் திறமையாகும்”.

கிராமப்புறங்களில் உள்ள குடிமக்களுக்கு கம்ப்யூட்டர் அல்லது டிஜிட்டல் அணுகல் சாதனங்களை (டேப்லட்டுகள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றை) ஆப்பரேட் செய்வது இமெயில்கைளை அனுப்புவது மற்றும் பெறுவது, இன்டர்நெட்டை புரவுஸ் பண்ணுவது, அரசு சேவைகளை அணுகுவது, தகவல்களை தேடுவது, டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்வது போன்றவை குறித்து பயிற்சியளித்து இதன் மூலம் அவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான பயன்பாட்டகங்கள் குறிப்பாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் போன்றவற்றை பயன்படுத்த அவர்களுக்கு உதவி செய்து தேசத்தை கட்டி எழுப்பும் செயலில் அவர்களை தீவிரமாக பங்கேற்க வைக்க இத்திட்டத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டமானது குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் (SC) / பழங்குடியினர் (ST), வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் (BPL), பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர்கள் போன்ற சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர்கள் உட்பட அனைத்து கிராமப்புற மக்களை இலக்காக கொண்டு டிஜிட்டல் இடைவெளியை நீக்க திட்டமிட்டுள்ளது.

அமலாக்க செயல்முறை

இலக்கிடப்பட்ட பயனாளிகள்

தகுதியான குடும்பத்தார்:

ஒரு குடும்பத்தார் என்றால் குடும்ப தலைவர், மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய ஒரு குழுவை குறிக்கிறது. டிஜிட்டல் கல்வியறிவே இல்லாத குடும்ப உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தார் இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பத்தாரராக கருதப்படுவார்கள்.

நுழைவுக்கான அளவுகோல்கள்

  • பயனாளி டிஜிட்டல் கல்வியறிவில்லாதவராக இருக்க வேண்டும்
  • தகுதியுள்ள குடும்பத்தாரிலிருந்து ஒரே ஒரு நபருக்கு மட்டுமே பயிற்சியளிக்கப்படும்
  • வயது வரம்பு 14 – 60 வயது
  • பின்வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
    • ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்கள், நலிவடைந்த குடும்பங்கள், கல்லூரி படிப்பை கைவிட்டவர்கள், கல்விப் பணி பங்கேற்பாளர்கள்
    • கம்ப்யூட்டர்/தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயிற்சி வசதி இல்லாத பள்ளிக்கூடங்களில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்.
    • SC, ST, BPL, பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர்

பயனாளிகளின் பட்டியலை தேர்ந்தெடுக்கும் பணியை DeGS, கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் இணைந்து CSC-SPV மேற்கொள்வர். அப்பயனாளிகளின் பட்டியல் திட்டத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயிற்சி செயல்முறை

மொத்த நேரம் : 20 மணி நேரம்

கற்றல் முடிவுகள்/ தேர்ச்சி நிலைகள்:

  • டிஜிட்டல் சாதனங்களின் அடிப்படைகளை (துறைரீதியான சொற்கள், செயல்படும் முறை மற்றும் செயல்பாடு) புரிந்துகொள்ளுதல்
  • தகவல்களை பெற, உருவாக்க, நிர்வகிக்க மற்றும் பகிர்ந்துகொள்ள டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துதல்
  • தகவல்களை தேட பயனுள்ள மற்றும் பொறுப்பான முறையில் இணைய வசதியை பயன்படுத்துதல்
  • திறம்பட தொடர்புகொள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்
  • டிஜிட்டல் நிதி ஆயுதங்களை பயன்படுத்தி (USSD/ HPI/ இ-வாலட்/ AEPS/ அட்டை/ PoS) பணமில்லா பரிவர்த்தனைகளை செய்தல்
  • டிஜிட்டல் லாக்கரை பயன்படுத்துதல்
  • குடிமக்களை மையப்படுத்திய ஆன்லைன் சேவைகளை பயன்படுத்துதல்
  • அன்றாட வாழ்க்கையில், சமூக வாழ்க்கையில் மற்றும் வேலையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கை பாராட்டுதல்

பயிற்சி பங்குதாரர்

  • டிஜிட்டல் கல்வியை வழங்குவதில் CSC-SPV இன் பயிற்சி பங்காளர்களாக சேர விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் / பெருநிறுவனங்கள் ஆகியவை கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் பின்வருமாறு:-
  • பயிற்சி பங்காளர் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும், கல்வி/தகவல் தொழில்நுட்ப கல்வியில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்திருக்க வேண்டும் மற்றும் நிரந்தர வருமான வரி கணக்கு எண் (PAN) மற்றும் குறைந்தது கடந்த மூன்று ஆண்டுகளில் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளை வைத்திருக்க வேண்டும்.
  • நிறுவனம்/அமைப்பு ஏதேனும் இந்திய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், உதாரணமாக அது ஒரு கம்பனி என்றால் கம்பனிகளின் பதிவகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், சங்கம் என்றால் சங்கங்களின் பதிவகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் இதே போல் அதனதன் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • பங்குதாரர் கல்வி/தகவல் தொழில்நுட்ப கல்வி முழுவதையும் உள்ளடக்கி தெளிவாக விவரிக்கப்பட்ட நோக்கங்களை, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட செயல்பாடுகளை மற்றும் செயல்முறைகளை கொண்டிருக்க வேண்டும்.

PMGDISHA

பயிற்சி பங்காளரின் பொறுப்பு

  • பயிற்சி பெறுபவருக்கு டிஜிட்டல் கல்வியை சொல்லிக் கொடுப்பதற்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டம் / வட்டம் / கிராமத்தில் சொந்த பயிற்சி மையங்களை உருவாக்குவது பயிற்சி பங்காளரின் பொறுப்பாகும்.
  • பயிற்சி மையங்கள் திட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப இருக்கின்றன என்பதை பயிற்சி பங்காளர் உறுதிப்படுத்த வேண்டும்.
  • மையங்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டை கண்காணிக்கும் பொறுப்பு ஒரு பயிற்சி பங்காளருக்கு உளளது.
  • பயிற்சி பங்காளர் அவருடைய மையங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட வேலை குறித்து மிகச் சரியாகவும் சரியான நேரத்திலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆதாரம் : PMGDISHA

NO COMMENTS

Exit mobile version