National Scholarship 2022-23 online application opened
Last date : 30.09.2022
Pre Matric, Post matric for minorities, Central sector scheme for college students
National Scholarship 2022-23 online application opened
Last date : 30.09.2022
Pre Matric, Post matric for minorities, Central sector scheme for college students
TNPSC குரூப் 4 தேர்வு 2022 பற்றிய முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
அதாவது தேர்வு தேதி, தேர்வு எழுதுவதற்கான தகுதிகள், பாடத்திட்டம், மாதிரிவினாத்தாள்கள் என அனைத்தையும் பார்க்கலாம்.
குரூப் 4 தேர்வு என்பது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) மேற்கொள்ளப்படும் ஒரு வகையான தகுதி தேர்வாகும்.
இத்தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரை வாளர், மற்றும் நில அளவர் போன்ற பதிவிகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மேலும் இந்த ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசைமாற்று வாரியம் போன்ற சில துறைகளின் காலிப் பணியிடங்களும் குரூப் 4 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வை TNPSC ஆண்டுத்தொறும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வு பற்றி இங்கு பார்ப்போம்.
தேர்வின் பெயர் | TNPSC Group 4 |
பதவியின் பெயர் | இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரை வாளர், மற்றும் நில அளவர் |
தேர்வு முகமை | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
காலிப்பணியிடங்கள் | 7301+ |
கல்வி தகுதி | பத்தாம் வகுப்பு |
சம்பளம் | ரூ. 19500 – ரூ. 75900 (முழுவிவரம்) |
அதிகாரபூர்வ அறிக்கை | முழுவிவரம் |
அண்மையில் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டு தேர்வு கால அட்டவணையில் (Annual Planner) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பானது, மார்ச் 2022-இல் வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதன்படி தேர்வு அறிவிப்பு இன்று (29th மார்ச்) வெளியிடப்பட்டுள்ளது தேர்வானது ஜூலை 2022 இல் நடத்தப்பட இருக்கிறது.
அறிவிப்பு வெளியாகும் நாள் | 29 மார்ச் 2022 |
விண்ணப்பம் தொடங்கும் நாள் | 30 மார்ச் 2022 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 28 ஏப்ரல் 2022 |
குரூப் 4 தேர்வு நாள் | 24 ஜூலை 2022 |
தேர்வு முடிவு வெளியாகும் நாள் | அக்டோபர் 2022 |
கல்வி மற்றும் வயது ஆகியவை இத்தேர்வை எழுதுவதற்கான அடிப்படை தகுதி ஆகும்.
இத்தேர்வை எழுத குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதை பொறுத்தவரையில், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.
மேலும் அதிகபட்ச வயதானது விண்ணப்பதாரரின் கல்வி மற்றும் பிரிவை (Community) பொறுத்து மாறுபடும்.
பிரிவு | 10ஆம் வகுப்பு மட்டும் படித்தவர்களுக்கான அதிகபட்ச வயது |
பொது பிரிவினர் | 30 +2 |
MBC, BC, BC(M) | 32 +2 |
SC, SC(A), ST | 35 +2 |
ஆதரவற்ற விதவைகள் | 35 +2 |
குரூப் 4 தேர்வானது 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வானது இரண்டு பகுதிகளை கொண்டது.
பாடப்பெயர் | வினாக்கள் எண்ணிக்கை | மதிப்பெண் |
பொது தமிழ் | 100 | 150 |
பொது அறிவு | 75 | 112.5 |
கணிதம் | 25 | 37.5 |
மொத்தம் | 200 | 300 |
Note: கடந்த காலங்களில், தேர்வர்கள் பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துகொள்ளும் வகையில் இருந்தது. ஆனால் தற்போது பொதுஆங்கிலம் நீக்கப்பட்டு, பொதுத்தமிழ் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது. |
குரூப் 4 பாடத்திட்டத்தை (Syllabus) 10 ஆம் வகுப்பு தரத்தில் வடிவமைத்துள்ளது TNPSC.
TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தின் சுருக்கிய வடிவத்தை கீழே கொடுக்கின்றோம், பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கல்வி 2014 –ன் கீழ் மேற்கொள்ளப்பட்ட 71 வது என்எஸ்எஸ்ஓ ஆய்வின்படி, கிராமப்புற குடும்பங்களில் 6% பேர் மட்டுமே கணினி பயன்படுத்துவோராக உள்ளனர். இதலிருந்து 15 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற குடும்பங்கள் (@ 16.85 கோடி குடும்பங்களில் 94%) கணினிகள் இல்லாமலும் மற்றும் டிஜிட்டல் படிப்பறிவற்று இருப்பதும் தெளிவாக தெரிகிறது. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் எங்கிலுமுள்ள கிராமப்புற பகுதிகளில் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு உறுப்பினர் என்ற விதத்தில் சுமார் 40% கிராமப்புற குடும்பங்களை சென்றடைந்து ஆறு கோடி பேர்களை டிஜிட்டல் கல்வியறிவு உள்ளவர்களாக ஆக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதற்கு முன்பாக, தி டிஜிட்டல் ஷக்ஷார்டா அபியான் (DISHA) அல்லது தேசிய மின்ணுக் கருவிகள் அறிவாற்றல் திட்டம் (NDLM) 52.5 லட்சம் மக்களுக்கு தகவல் தொழில் நுட்பம் பற்றிய பயிற்சியை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களிலுள்ள அங்கன்வாடி, ஆஷா பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகப் பணியாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி தருவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் சாராதவர்களும் பயிற்சியின் மூலம் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்று ஜனநாயக நடைமுறைகளிலும் வளர்ச்சியிலும் திறம்படவும், விரைவாகவும் பங்கேற்க வழி பிறக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
டிஜிட்டல் கல்வி விளக்கம்: “டிஜிட்டல் கல்வி என்பது வாழ்க்கை சூழ்நிலைகளில் பயனுள்ள வேலைகளுக்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை புரிந்துகொள்ளும் மற்றும் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் திறமையாகும்”.
கிராமப்புறங்களில் உள்ள குடிமக்களுக்கு கம்ப்யூட்டர் அல்லது டிஜிட்டல் அணுகல் சாதனங்களை (டேப்லட்டுகள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றை) ஆப்பரேட் செய்வது இமெயில்கைளை அனுப்புவது மற்றும் பெறுவது, இன்டர்நெட்டை புரவுஸ் பண்ணுவது, அரசு சேவைகளை அணுகுவது, தகவல்களை தேடுவது, டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்வது போன்றவை குறித்து பயிற்சியளித்து இதன் மூலம் அவர்களை தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான பயன்பாட்டகங்கள் குறிப்பாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் போன்றவற்றை பயன்படுத்த அவர்களுக்கு உதவி செய்து தேசத்தை கட்டி எழுப்பும் செயலில் அவர்களை தீவிரமாக பங்கேற்க வைக்க இத்திட்டத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டமானது குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் (SC) / பழங்குடியினர் (ST), வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் (BPL), பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர்கள் போன்ற சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர்கள் உட்பட அனைத்து கிராமப்புற மக்களை இலக்காக கொண்டு டிஜிட்டல் இடைவெளியை நீக்க திட்டமிட்டுள்ளது.
ஒரு குடும்பத்தார் என்றால் குடும்ப தலைவர், மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அடங்கிய ஒரு குழுவை குறிக்கிறது. டிஜிட்டல் கல்வியறிவே இல்லாத குடும்ப உறுப்பினர்களை கொண்ட குடும்பத்தார் இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்பத்தாரராக கருதப்படுவார்கள்.
பயனாளிகளின் பட்டியலை தேர்ந்தெடுக்கும் பணியை DeGS, கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் இணைந்து CSC-SPV மேற்கொள்வர். அப்பயனாளிகளின் பட்டியல் திட்டத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
மொத்த நேரம் : 20 மணி நேரம்
PMGDISHA
பயிற்சி பங்காளரின் பொறுப்பு
ஆதாரம் : PMGDISHA
பெருகிவரும் கொரோனா பெருந்தொற்றிளிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அரசு தடுப்பூசி வழங்கி வருகிறது. 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்து கொள்ளவேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
அரசு அவ்வாறு தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வருகிறது. தற்போது பல இடங்களில் இந்த சான்றிதழ் முக்கிய ஆவணமாக கேட்கபடுகிறது. அரசு அலுவலகங்கள் முதல் கல்லூரிகள் வரை இந்த சான்றை முக்கிய ஆவணமாக கேட்டு வருகின்றனர்.
இந்த சான்றிதழ் நமது டாட்நெட் இசேவை மையத்தில் உடனுக்குடன் எடுத்து தரப்படும். சிறிய கையடக்க அட்டையாக பிரிண்ட் செய்து தரப்படும் எனவே தாங்கள் இதை எளிதாக உங்கள் பாக்கெட்டில் வைத்து செல்ல உதவியாக இருக்கும்.
இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் விரைவாக செலுத்தி கொள்ள அரசு கேட்டு கொண்டுள்ளது. 3 வது அலை பரவும் என்ற அச்சம் நிலவுவதால் தவறாமல் தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும். அதேபோல் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் இவற்றில் பணிபுபவர்களும் அங்கு செல்பவர்களும் அவசியம் முககவசம் அணிந்து இருக்க வேண்டும்
தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு பதிவு செய்து அதை 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ம் வருடங்களில் புதுபிப்பு செய்ய தவறியவர்களுக்காக தமிழக அரசு வாய்ப்பு கொடுத்திருந்தது. அது முடிவடைந்த நிலையில் இன்னும் அதிக நபர்கள் இந்த வாய்ப்பையும் தவறவிட்டது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனால் தமிழக அரசு இந்த புதுபிப்பு வாய்ப்பை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ம் வருடங்களில் தனது வேலைவாய்ப்பு பதிவினை புதுபிக்க தவறியவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி இந்த 3 மாதங்கலுக்குள் புதுபித்து கொள்ளவேண்டுமாய் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதையும் தவறவிட்டால் மறு வாய்ப்பு கிடைக்காது. எனவே 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ம் வருடங்களில் தனது வேலைவாய்ப்பு பதிவினை புதுபிக்க தவறியவர்கள் தவறாமல் புதுபித்து கொள்ளவும்.