டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2022
TNPSC குரூப் 4 தேர்வு 2022 பற்றிய முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
அதாவது தேர்வு தேதி, தேர்வு எழுதுவதற்கான தகுதிகள், பாடத்திட்டம், மாதிரிவினாத்தாள்கள் என அனைத்தையும் பார்க்கலாம்.
குரூப் 4 தேர்வு என்றால் என்ன?
குரூப் 4 தேர்வு என்பது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) மேற்கொள்ளப்படும் ஒரு வகையான தகுதி தேர்வாகும்.
இத்தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரை வாளர், மற்றும் நில அளவர் போன்ற பதிவிகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
மேலும் இந்த ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசைமாற்று வாரியம் போன்ற சில துறைகளின் காலிப் பணியிடங்களும் குரூப் 4 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வை TNPSC ஆண்டுத்தொறும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வு பற்றி இங்கு பார்ப்போம்.
குரூப் 4 தேர்வு ஓர் சிறு அலசல்
தேர்வின் பெயர் | TNPSC Group 4 |
பதவியின் பெயர் | இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக் கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரை வாளர், மற்றும் நில அளவர் |
தேர்வு முகமை | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
காலிப்பணியிடங்கள் | 7301+ |
கல்வி தகுதி | பத்தாம் வகுப்பு |
சம்பளம் | ரூ. 19500 – ரூ. 75900 (முழுவிவரம்) |
அதிகாரபூர்வ அறிக்கை | முழுவிவரம் |
குரூப் 4 தேர்வு முக்கிய நாட்கள்
அண்மையில் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டு தேர்வு கால அட்டவணையில் (Annual Planner) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பானது, மார்ச் 2022-இல் வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதன்படி தேர்வு அறிவிப்பு இன்று (29th மார்ச்) வெளியிடப்பட்டுள்ளது தேர்வானது ஜூலை 2022 இல் நடத்தப்பட இருக்கிறது.
அறிவிப்பு வெளியாகும் நாள் | 29 மார்ச் 2022 |
விண்ணப்பம் தொடங்கும் நாள் | 30 மார்ச் 2022 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 28 ஏப்ரல் 2022 |
குரூப் 4 தேர்வு நாள் | 24 ஜூலை 2022 |
தேர்வு முடிவு வெளியாகும் நாள் | அக்டோபர் 2022 |
குரூப் 4 தேர்வு எழுத தகுதிகள்
கல்வி மற்றும் வயது ஆகியவை இத்தேர்வை எழுதுவதற்கான அடிப்படை தகுதி ஆகும்.
இத்தேர்வை எழுத குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதை பொறுத்தவரையில், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும்.
மேலும் அதிகபட்ச வயதானது விண்ணப்பதாரரின் கல்வி மற்றும் பிரிவை (Community) பொறுத்து மாறுபடும்.
வயது வரம்பு
பிரிவு | 10ஆம் வகுப்பு மட்டும் படித்தவர்களுக்கான அதிகபட்ச வயது |
பொது பிரிவினர் | 30 +2 |
MBC, BC, BC(M) | 32 +2 |
SC, SC(A), ST | 35 +2 |
ஆதரவற்ற விதவைகள் | 35 +2 |
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறை
குரூப் 4 தேர்வானது 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வானது இரண்டு பகுதிகளை கொண்டது.
பாடப்பெயர் | வினாக்கள் எண்ணிக்கை | மதிப்பெண் |
பொது தமிழ் | 100 | 150 |
பொது அறிவு | 75 | 112.5 |
கணிதம் | 25 | 37.5 |
மொத்தம் | 200 | 300 |
Note: கடந்த காலங்களில், தேர்வர்கள் பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துகொள்ளும் வகையில் இருந்தது. ஆனால் தற்போது பொதுஆங்கிலம் நீக்கப்பட்டு, பொதுத்தமிழ் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது. |
TNPSC குரூப் 4 தேர்வு 2022 பாடத்திட்டம்
குரூப் 4 பாடத்திட்டத்தை (Syllabus) 10 ஆம் வகுப்பு தரத்தில் வடிவமைத்துள்ளது TNPSC.
TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தின் சுருக்கிய வடிவத்தை கீழே கொடுக்கின்றோம், பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பொது தமிழ்
- இலக்கணம்
- இலக்கியம்
- தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்
பொது அறிவு / General Studies
- பொது அறிவியல்
- நடப்புநிகழ்வுகள்
- புவியியல்
- இந்திய அரசியல்
- இந்தியா & தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு
- இந்திய பொருளாதாரம்
- இந்திய தேசிய இயக்கம்
- திறனறிவு மற்றும் புத்திகூர்மை தேர்வு